Thursday, July 22, 2010

நிகழ்வின் மறுப்பில் உடையா துரும்பு

உயரத் தெறிக்கும் துளிக்கடல் நுரையின் ஊழித்தாண்டவமதில் தவிக்கும் நிகழ்வின் மறுப்பில் உடையும் சில நொடி, 'உனக்கும் கைவரும்,பழகு! ' எனச்சொல்லும் பெருமதி திமிங்கலம் விலக்கிடும் இடைவெளி;
கேவும் குழந்தை கூறும் செய்தி கேளாவிடினும் உணர்ந்துணவளித்[தாய்].
விருப்பம்,வேட்கை, வியப்பு, வேண்டல், விழுமிய வண்ணம் வியம்பவே மொழி.
எழுத்துக்கூட்டி படிக்கும் நிலைதான்.இடறாது நடக்க நீ கைபிடி.
விளக்கம் கூறின் விருப்பம் கூடும்; விளங்காச் சொல்லிலும் விசனம் இல்லை.
கரை காட்டிச் சென்றாலும், கரம் நீக்கிச் சென்றாலும்,
வரை காணா கடலில் வியந்தும் விரையும் துரும்பே நான்.
நிகழ்வின் மறுப்பில் உடையா துரும்பு

No comments:

Post a Comment